2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

Date:

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் (Leptospirosis) சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கிட்டத்தட்ட 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் எலிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் துஷானி தாபரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக 2025ஆம் ஆண்டில் இந்த நோயால் சுமார் 200 மரணங்கள் பதிவாகியிருந்தன.

கடும் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் எனவும், சிக்கல்களை தவிர்க்க உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

நோய்த்தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண்ணுடன் மக்கள் தொடர்பு கொள்ளும்போது, தோலில் உள்ள காயங்கள் அல்லது சளிச்சவ்வு வழியாக பாக்டீரியாக்கள் உடலுக்குள் நுழைகின்றன என்று வைத்தியர் தாபரேரா விளக்கியுள்ளார்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மொனராகலை மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காது சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய ரீதியில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கக்கூடும் : ஐ.நா சபை எச்சரிக்கை!

மத்திய கிழக்கின் முக்கிய கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait...