அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

Date:

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று (12) கொழும்பு, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்:

முக்கிய உரை  சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன. வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கோடும், ஊடகவியலாளர்களுடனான உறவை வலுப்படுத்தும் வகையிலும் இந்த இப்தார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மதத் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...