உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி, Fried Rice மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பால் தேநீர் மற்றும் பிளேன் டீ ஆகியவற்றின் விலைகளும் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உணவகங்கள் நடத்தப்படும் அனைத்து இடங்களிலும் மின்சாரப் பயன்பாடு 180 அலகுகளைத் தாண்டும் எனவும், அத்தகைய சூழ்நிலையில் பாரிய மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பதனால், இத்தொழிற்துறையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த விலை அதிகரிப்பு தீர்மானம் எடுக்கப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...