ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

Date:

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இக்கட்டான தருணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை எப்போதும் உறுதியாக நிற்பதுடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...