கட்டார் மன்னருடன் ஜனாதிபதி விசேட தொலைபேசி கலந்துரையாடல்

Date:

வளைகுடா நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் கட்டார் இராச்சியத்தின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியுடன் விசேட தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

நெருக்கடி சூழ்நிலை குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். கட்டார் இராச்சியம் முகம்கொடுத்துள்ள சவாலான சூழலில் அந்நாட்டிற்கான ஒத்துழைப்பை ஜனாதிபதி இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது கட்டார் மன்னரினால் இரு பிரதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டாரிலுள்ள இலங்கை பணியாளர்களின், குடியேற்றவாசிகளின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு உறுதி வழங்கப்பட்டது.

அத்துடன் தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை விநியோக்க கட்டார் இராச்சியம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுமெனவும் மன்னர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...