-புத்தளம் எம். யூ. எம். சனூன்
புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பிரச்சினைகள், தற்போதைய நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள நுஹுமான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வை, இலங்கை சமாதானப் பேரவை, புத்தளம் டி.ஐ.ஆர்.சி. (DIRC) நிறுவனம் மற்றும் ஒடெப்ட் (ODEPT) நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
புத்தளம் மாநகர சபையின் தலைவர் பொறியியலார் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய சர்வமதத் தலைவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
கொழும்பு தேசிய ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) ஆளுநர் சபை உறுப்பினர் சுஜித் அபேவிக்ரம பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதன்போது மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக, புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முஸ்னியா அவர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நெறிப்படுத்தினார்.
ஓய்வுபெற்ற நசீர் ஆசிரியர் (ISA) அவர்கள், நிகழ்வின் கருத்துப் பரிமாற்றங்களை மிகவும் துல்லியமாகவும் கச்சிதமாகவும் மொழிபெயர்ப்பு செய்திருந்தார்.
மாவட்டத்தின் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்த இவ்வாறான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்துத் தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.

