எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

Date:

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரபல எழுத்தாளரும் ‘ஞானம்’ சஞ்சிகையின் ஸ்தாபகரும், ஆலோசகருமான சாகித்ய ரத்னா விருது பெற்ற டாக்டர் தி. ஞானசேகரன் காலமானார் என்ற செய்தி, தெல்தோட்டை ஊடக மன்றத்திற்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

எழுத்துலகில் தனித்துவமான பண்பும் ஆழமான சிந்தனையும் கொண்ட இவர், பல்வேறு சமூக, கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியவை.

அனைவருடனும் அன்பாக பழகும் பண்பும், குறிப்பாக இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பும் எப்போதும் போற்றத்தக்கதாகும். அவரது வழிகாட்டலின் கீழ் வெளிவந்த ‘ஞானம்’ சஞ்சிகை, இலக்கிய உலகில் ஒரு முக்கிய தளமாகத் திகழ்ந்தது. இதில் குறிப்பாகக் குறிப்பிட வேண்டியவை:

  • அருள்வாக்கி அப்துல்காதிர் புலவரின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட 217ஆவது சிறப்பிதழ்.

  • 292 பக்கங்களில் புலவரின் கிடைத்தற்கரிய 11 நூல்களைத் தேடி ஒன்றிணைத்து வெளியிட்டமை.

  • மறக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிம் புலவரை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்த இந்த முயற்சி, எதிர்கால ஆய்வுகளுக்கான ஒரு பொக்கிஷமாகும்.

இந்தச் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, 2022 ஆம் ஆண்டு தெல்தோட்டை ஊடக மன்றத்தினால் நடத்தப்பட்ட அருள்வாக்கி நினைவுப் பேருரை நிகழ்வில், டாக்டர் தி. ஞானசேகரன் அவர்களுக்கு ‘அருள்வாக்கி நேசன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.

மறைந்தவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எழுத்துலகினருக்கும் தெல்தோட்டை ஊடக மன்றம் தனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...