சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த தானப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை. நடைபெறவுள்ளது.
தேசிய இரத்த வங்கியின் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், “உங்கள் இரத்தம் ஒரு உயிரைக் காக்கும்!” என்ற கருப்பொருளின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் அகிலத்து மனிதர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32)
என்ற புனித குர்ஆன் வசனத்திற்கு இணங்க, மனிதநேயத்தை வளர்க்கும் இந்த உன்னதமான காரியத்தில் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்து உயிரிழப்பதைத் தவிர்க்க உதவுமாறு பிரதேச மக்களுக்கும் கொடையாளர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
