கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

Date:

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகள் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

தேசிய சூரா சபையின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

“கலாநிதி தம்மிக்க ஜயசிங்க அவர்களின் தந்தையாரின் மறைவுச் செய்தி கேட்டு நாம் மிகுந்த கவலையடைகிறோம். அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரது மறுவாழ்வு சிறக்கப் பிரார்த்திக்கின்றோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஷாம் நவாஸ் விடுத்துள்ள அறிக்கையில்:

“கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவு குறித்த செய்தி எமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் பிரார்த்திக்கிறோம்.”

கலாநிதி தம்மிக்க ஜயசிங்க அவர்கள் இலங்கையில் இன நல்லிணக்கத்திற்காகவும், மொழிப் புலமை மூலமாகவும் சமூகங்களுக்கு இடையே பாலமாகச் செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தையாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தனகல்ல பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...