நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

Date:

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிப்புறங்களில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளை காலை 10.00 மணிக்கு முன்னதாக நிறைவு செய்யுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விளையாட்டுத்துறை வைத்திய நிபுணர் ருவான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் புத்தாண்டு விழாக்களில் மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம் உள்ளிட்ட பல வெளிப்புற விளையாட்டுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நாளின் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். சூரிய ஒளியில் நேரடியாக நின்று விளையாடும் நிகழ்வுகளை காலை 10.00 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். மாலை நேர நிகழ்வுகளை 03.00 மணிக்கு பின்னர் ஆரம்பிக்க வேண்டும்.

அத்துடன், இவ்வாறான போட்டிகளில் பங்கேற்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதிகப்படியான களைப்பு அல்லது தசைப்பிடிப்பு ஏற்பட்டால், அது வெப்ப அதிகரிப்பின் அறிகுறியாகும்.

அத்தகைய நிலையில் உடனடியாக விளையாட்டிலிருந்து விலகி, நிழலான இடத்திற்குச் சென்று நீரைக் குடித்து உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

விழா ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு மைதானங்களில் குளிர்ந்த நீர் மற்றும் ஐஸ் கட்டிகள் போன்ற முதலுதவி வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும். என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...