புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Date:

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பல்கலைக்கழகத்தினால் நேற்று (9) சித்திரை புத்தாண்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்தப் புத்தாண்டு விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் மாலை 6 மணியளவில் நிறைவடைந்துள்ளன.

எவ்வாறாயினும், அதன் பின்னர் அந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இரவில் தனியார் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அந்த விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளதுடன், அவர் பின்னால் ஒரு மாணவனும் சென்றுள்ளார்.

அதைக் கண்ட அந்த மாணவியின் நண்பர் (உயிரிழந்த மாணவர்), அவளுக்குப் பின்னால் சென்ற மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அந்த நேரத்தில், தாக்குதலுக்குள்ளான மாணவனின் நண்பர்கள் குழுவொன்று, தாக்குதல் நடத்திய மாணவரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த மாணவரை விடுதி ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்த நேரத்திலேயே குறித்த மாணவர் உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்களை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 50 மி.மீ மழை

மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும்...

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...