மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல்: அரச செலவினங்களைக் குறைக்கப் புதிய கட்டுப்பாடு!

Date:

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கவும், அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுக்கவும் அரச செலவினங்களை முறையாக நிர்வகிப்பது அவசியமென நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் புதன்கிழமை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றைத் தரம் பிரித்து ஆராய்ந்த அமைச்சரவை, பின்வரும் தீர்மானத்தை எடுத்துள்ளது:

பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் கொடுப்பனவுகள், இனிமேல் 2026.03.01 அன்று நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

எரிபொருள் அளவு அல்லது எரிபொருள் விலையின் அடிப்படையில் வழங்கப்படும் இதர அனைத்து கொடுப்பனவுகளும், மறு அறிவித்தல் வரும் வரை கடந்த மார்ச் 1 ஆம் திகதி நிலவிய விலையிலேயே கணக்கிடப்பட வேண்டும்.

இதுவரை எரிபொருள் கொடுப்பனவுகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்துச் சுற்றறிக்கைகளும், இந்த புதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமையவே இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அந்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...

புத்தாண்டு காலத்தில் இணையவழி மோசடி: பொலிஸார் எச்சரிக்கை

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து...

மத்திய கிழக்கு மோதல்: ஐநா உடனடியாகத் தலையிடக் கோரி கொழும்பில் ஐநா அலுவலகத்தில்’தர்மசக்தி அமைப்பு’ மகஜர் கையளிப்பு.

இலங்கையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றி வரும் பௌத்த,...