மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை (10) புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பேருந்து நிலையத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் திட்டமிட்ட குழுக்களின் செயல் என்றும் அவர் மேலும் கூறினார்.

பெண்கள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் முதல் நாளன்று கழற்றப்பட்டிருந்த நிலையில், அவை மீண்டும் பொருத்தப்பட்டன. எனினும், நேற்று (09) இரவும் இரண்டாவது முறையாக அக்குழாய்கள் கழற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதுடன், அதற்கமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...