லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவோம்: ஈரான் எச்சரிக்கை.

Date:

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட  பிறகு,நேற்று புதன்கிழமை  மத்திய பெய்ரூட்டில் உள்ள பரபரப்பான வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் முன் அறிவிப்பின்றி நடத்தப்பட்டன.

இதில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் லெபனான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்ந்தால், ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டியிருக்கும் என்று அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் அனுமதியின்றி ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் எந்தக் கப்பலையும் அழித்துவிடுவோம் என்று புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும் ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...