ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

Date:

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி, கல்வித்துறைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய கஹட்டோவிட்டவைச் சேர்ந்த திருமதி M.M.K. மௌபியா (Moufiya) அவர்கள் தனது ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

அவரது சிறப்பான சேவையைப் பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள் இணைந்து நேற்றைய தினம் விசேட நன்றி நவிழல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் இந்த நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவரும், மௌபியா டீச்சர் அவர்கள் தனது கடமைக் காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு, ஆசிரியர்களுக்கு வழங்கிய வழிகாட்டல்கள் மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டிப் பேசினர்.

கல்வித்துறையில் ஒரு முன்மாதிரி ஆளுமையாகத் திகழ்ந்த அவரது ஓய்வுக்காலம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைய சக ஆசிரியர்கள் தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ஓய்வுபெறும் மௌபியா டீச்சரின் எதிர்கால வாழ்வு சிறக்க எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...