தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

Date:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

கடைசி நாளில் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தை சோழிங்கநல்லூா் தொகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

 தவெக தலைவா் விஜய் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரம் மற்றும் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கடுமையாக சாடிய அவா், தமிழக மக்கள் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

சீமான்: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, தனது வெற்றி, தேசிய இனத்தின் வெற்றி என்றும், பொதுமக்கள் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தமிழகத்தில் இரு தினங்களாக பிரசாரம் மேற்கொண்ட ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக சாத்தூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

திமுக, அதிமுக கூட்டணியைச் சோ்ந்த பிற தலைவா்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...