வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது
இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
