கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, பாதுக்கை, ஹோமகமை மற்றும் பெலன்வத்தை ஆகிய பகுதிகளில் வெவ்வேறு நாட்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
பாதுக்கவில் இன்று (02) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம், ஹோமகமையில் நாளை (03) 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
பெலன்வத்தையில் சனிக்கிழமை (04) இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீர்வெட்டு வெட்டு அமுலில் இருக்கும்.
தற்போது இலங்கையைப் பாதிக்கும் வறண்ட வானிலை காரணமாக, கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களில் நீர் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நீர்வெட்டுக்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைக் கண்காணித்து நிர்வகிப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் மற்றும் பொது முகாமையாளரினால் ஒரு சிறப்புச் செயல்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
