ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அத்தாக்குதல்களின் பின்னணியில் உள்ள நீதி மற்றும் சட்டப் போராட்டங்களை விவரிக்கும் ‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக விழா கொழும்பில் நடைபெறவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்காத சூழலில், சட்ட வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து இந்த முக்கிய ஆவணத்தை சமர்ப்பிக்கின்றனர்.
Equity Publishers (pvt) Ltd. நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் (Postal Headquarters Auditorium), மாலை 4.15 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸுஹைர் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பிரதம அதிதியாக அருட்தந்தை மா. சக்திவேல், கலந்துகொள்வதோடு நூலாய்வை சிராஜ் மஷ்ஹூர் (ஆய்வாளர்) நிகழ்த்துவார். சிரேஸ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சிறப்புரையாற்றுவார்.
தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதிவின் வெளியீட்டு விழாவில் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
