நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் (20) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கண்டி , நுவரெலியா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
