ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

Date:

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் அறிவித்தலின்படி, வாரத்தின் நாட்களைப் பொறுத்து ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி

வெள்ளி மற்றும் சனிக்கிழமை: நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1:00 மணி வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ; நள்ளிரவு 12:30 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில்  நிகழ்வுகளை நடத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நேரக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...