புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்!

Date:

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு விழாக்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

(07) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், மின்சார நிறுவனத்திற்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி, இந்த விழாக்களுக்காக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மின்சார நிறுவனத்திற்கு உரிய கட்டணங்களைச் செலுத்தி, குறித்த விழாக்களுக்கான மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

33 ஆண்டுகளுக்குப் பின் அபூர்வ நிகழ்வு: அரஃபாத் நன்னாளில் புனித காபாவிற்கு நேர் உச்சியில் தோன்றும் சூரியன்!

இஸ்லாமிய நாட்காட்டியின் மிக முக்கியமான மற்றும் புனிதமான நாளான அரஃபாத் தினத்தில் ...

ஹஜ் பெருநாள் எதிரொலி: மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கால்நடை கட்டுப்பாடுகளால் இந்து வியாபாரிகள் கடும் கடன் சுமை!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு பிணையில் செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தலங்கம பொலிசாரினால் இன்று...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள்

எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு...