விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

Date:

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாக்கும் வகை யிலும், ஏனைய சமூ கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரச்சாரக் குழுவின் தவிசாளர் அஷ்ஷைக் எச். உமர்தீன் மற்றும் உதவிச் செயலாளர் அஷ்ஷைக் ஏ.எச்.எம்.அக்ரம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள வழிகாட்டல் அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

ஆரோக்கியமும் ஓய்வும் அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள இரு பெரும் அருட்கொடைகளாகும். இது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிடும் போது,

“மனிதர்களில் அதிகமானோர் ஆரோக்கியம் மற்றும் ஒய்வு ஆகிய இரு அருட்கொடைகளின் விடயத்தில் நஷ்டமடைந்து கொண்டிருக்கின்றனர் என எச்சரித்துள்ளார்கள். எனவே, இந்த விடுமுறை காலங்களைத் திட் டமிட்டுப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

விடுமுறை நாட்களில் பெற்றோரைப் பேணுதல், உறவினர்களுடன் உறவைப் பேணுதல் மற்றும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற பய னுள்ள காரியங்களில் ஈடுபடுவதை இஸ்லாம் ஊக்குவிக்கின்றது.

பயணங்கள் மனித வாழ்க்கையில் அனுபவங்களையும் படிப்பினைக ளையும் தரக்கூடியவை. நல்ல நோக் கங்களுக்காக மேற்கொள்ளப்படும் பயணங்களை இஸ்லாம் ஊக்குவிக்கும் அதேவேளை, பாவமான காரியங்க ளுக்காகவும் வீண் பெருமைக்காகவும் மேற்கொள்ளப்படும் பயணங்களை வெறுக் கின்றது. இத்தகைய பயணங்களுக்காகச் செலவழிக்கப்படும் பணம் மற்றும் நேரத் திற்காகப் பாவங்களே எழுதப்படுகின்றன. பயணங்களை மேற்கொள்ளும் போது பின்வரும் இஸ்லாமிய ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்குமாறு உலமா சபை வலியுறுத்தி யுள்ளது.

பயணத்தைத் தொடங்கும் முன் குடும்பக் கடமைகளை நிறைவேற்றி விட்டுச் செல்ல வேண்டும். பயணத்தின் போது ஒரு தலைவரை நியமித்து, ஆலோசனைகளுடன் செயல்படுவது தேவையற்ற சிரமங் களைத் தவிர்க்க உதவும்.

பயணத்தில் இருக்கும்போது ஐவேளைத் தொழுகைகளைத் தவற விடக்கூடாது. பயணிகளுக்கு வழங் கப்பட்டுள்ள மார்க்கச் சலுகைகளை (கஸர், ஜம்வு) முறையாக அறிந்து பயன்படுத்த வேண்டும்.

அஜ்னபி மஹ்ரமி ஒழுக்கங்கள் மற்றும் ஆடை முறைகளை முறை யாகப் பேண வேண்டும். இசை, அனாச்சாரங்கள் மற்றும் வீண் செலவுகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

வாகனங்களை நிதானமாகச் செலுத்த வேண்டும். வீதி ஒழுங்குகளைப் பேணுவதுடன், பிற மதத்தவர்க ளுக்கு எவ்வித இடையூறும் ஏற்ப டாத வகையில் கண்ணியமாக நடந் துகொள்ள வேண்டும்.

ஹலாலான உணவுகளை உட்கொள்வதில் மிகுந்த சுவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஸ் லாத்தின் தனித்துவத்தைப் பேணி, மற் றவர்களுக்கு முன்மாதிரியாகவும் பய னுள்ளவர்களாகவும் முஸ்லிம் சமூகம் திகழ வேண்டும் என அந்த அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...