ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

Date:

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அடுத்த வாரம் முதல் 25% வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தனது ‘Truthsocial’ கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், அதன்படி கார்கள் மற்றும் டிரக்குகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகளில் கார்கள் மற்றும் டிரக்குகள் தயாரிக்கப்பட்டால், வரி விதிக்கப்படாது என்றும் அமெரிக்க அதிபரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பல கார் மற்றும் டிரக் தொழிற்சாலைகள் கட்டுமானத்தில் இருப்பதாகவும், அதில் 100 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அமெரிக்க அதிபர், இது கார் மற்றும் டிரக் உற்பத்தி வரலாற்றில் ஒரு சாதனை என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் இந்தத் தொழிற்சாலைகள் விரைவில் திறக்கப்படும் என்றும், தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த செயல்முறை இதற்கு முன்பு ஒருபோதும் நடந்ததில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதியின் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...