தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

Date:

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடவின் உத்தரவின் பேரில் நேற்று (07) மற்றும் இன்று (08) ஆகிய இரு தினங்கள் 4 பாடசாலைகள் மூடப்பட்டன.

தெனியாய மத்திய மகா வித்தியாலயம், தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ இருமொழி வித்தியாலயம், பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம், குறித்த பாடசாலைகளில் மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தற்போது பரவி வரும் காய்ச்சலின் தன்மை மற்றும் அதன் பின்னணி குறித்துக் கண்டறியவே கொழும்பிலிருந்து விசேட தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு தெனியாயவிற்கு வருகை தரவுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க, “தற்போது நிலவும் காய்ச்சல் நிலைமை குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளனவே தவிர, நிலைமை இன்னும் தீவிரமடையவில்லை” எனத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...