பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

Date:

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025/2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக பிரவேச கையேட்டினை (University Admission Manual) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதிவுசெய்யப்பட்ட புத்தகசாலைகளின் ஊடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டின் மென்பொருளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk ஊடாக ஆன்லைன் முறையில் கொள்வனவு செய்யலாம்.

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இம்முறை 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளதோடு, இது மொத்த பெறுபேறுகளில் 62.64% ஆகும்.

Popular

More like this
Related

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில், மின்னேரியாவின் 7 ஆவது மைல்கல்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...