மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், ‘முஸ்லிம் நட்பு சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் விழிப்புணர்வு கருத்தரங்கு 2026’ (Muslim Friendly Tourism & Hospitality Awareness Seminar 2026) கடந்த 2026 மே 16 அன்று கொழும்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த உயர்மட்டக் கருத்தரங்கை, ஸ்ரீலங்கா – மலேசியா வர்த்தக சபை மற்றும் மலேசியாவின் இஸ்லாமிய சுற்றுலா மையம் ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
இந்தச் சிறப்பு நிகழ்வில், இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் மேதகு பட்லி ஹிஷாம் ஆடம் (HE Badli Hisham Adam) அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
கருத்தரங்கின் முக்கிய நோக்கம், இலங்கையின் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு முஸ்லிம் சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
உலகளாவிய இஸ்லாமிய சுற்றுலா சந்தையை ஈர்ப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல்.
மலேசியா மற்றும் இலங்கை இடையேயான வர்த்தக, கலாசார மற்றும் நல்லுறவுப் பாலத்தை மேலும் பலப்படுத்துதல்.
இலங்கையின் முன்னணி சுற்றுலாத் துறை சார்ந்த பிரமுகர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் பலர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

