தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

Date:

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை (Appeals) சமர்ப்பிப்பது குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரண்டாம் சுற்று மேன்முறையீடுகளை 2026.05.08 ஆம் திகதி முதல் 2026.05.29 ஆம் திகதி வரை நிகழ்நிலை (Online) முறைமையூடாகச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இனுள் பிரவேசித்து தமது மேன்முறையீடுகளை மேற்கொள்ளலாம்.

அல்லது http://g6application.moe.gov.lk எனும் இணைப்பினூடாக நேரடியாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தின் கீழ் ஒரு மாணவர் ஆகக்கூடியது 3 பாடசாலைகளுக்கு மாத்திரமே மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...