தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

Date:

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு நிபந்தனை விதித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எனினும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் கேட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.

இதுதொடர்பாக முடிவெடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முழு ஆதரவை வழங்க காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத, எந்தவொரு வகுப்புவாத, மதவாத சக்தியையும் இந்த கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை முன்வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய அரசு மட்டுமின்றி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களுக்கும் தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...