பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

Date:

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார். அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார்

விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நாளை மாலை 3.15 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும், அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...