டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
43 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அதி அவதான வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, 6 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவின் சமூக வைத்திய விசேட நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 26,071 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 13 மரணங்களும் பதிவாகியுள்ளன.
நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
