2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

Date:

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

2025 செப்டெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திறைசேரியால் செலுத்தப்பட்ட 10 கொடுப்பனவுகளின் மொத்த தொகையான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையான திறைசேரியின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும பல விடயங்களை வெளிப்படுத்தினார்.

இந்த மோசடி தொடர்பில் நிறுவன மட்டத்தில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஊடாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், இந்த நிதி மோசடி விவகாரம் தொடர்பில் நிதி அமைச்சரான,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உரையாற்றவுள்ளார்.

Popular

More like this
Related

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...