ரஷ்ய சுகாதார அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம்!

Date:

இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) உள்ளிட்ட குழுவினர் இன்று (04) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ரஷ்ய சுகாதார அமைச்சர் உட்பட ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று (03) நாட்டை வந்தடைந்தனர்.

அவரது இந்த விஜயத்தின் போது, இலங்கை மற்றும் ரஷ்ய சுகாதார அமைச்சுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் எட்டப்படவுள்ளன.

ரஷ்ய சுகாதார அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களுக்கான பயிற்சி மற்றும் உயர்தரப் பயிற்சி, கல்வி ஒத்துழைப்பு, ஆயுர்வேத மருத்துவத் துறை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுற்றுலா சுகாதார சேவை உள்ளிட்ட சுகாதாரத் துறையின் முக்கிய பிரிவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவுள்ளனர்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் தமது மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்து நாளை (05) நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...