ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

Date:

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, இன்று (08) கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கபில சந்திரசேன தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேன, அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவரது பிணையை ரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரியதையடுத்து, அவரைக் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...