இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

Date:

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் முக்கிய இயக்கமான ‘இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி’ அமைப்பின் ஏற்பாட்டில், நாளை (சனிக்கிழமை) ஒரு மாபெரும் இஸ்லாமிய மாநாடு நடைபெற உள்ளது.

புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெறவிருக்கும் இம்மாநாடு, நாளை மாலை 4:00 மணிக்குத் தொடங்கி இரவு 9:00 மணி வரை தடையின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 “மலர்ச்சியான உலக வாழ்வு, மகத்தான மறுமை வெற்றி” என்ற பிரதான மகுடத்தைத் தாங்கி நடத்தப்படும் இம்மாநாட்டில், சமூகத்திற்குத் தேவையான முக்கியத் தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.

குறிப்பாக ‘நவீன சிந்தனை சவால்களுக்கு மத்தியில் இஸ்லாமிய வாழ்வு, இறைநம்பிக்கையும் மறுமை வாழ்வும், மலர்ச்சியான உலக வாழ்வு – மகத்தான மறுமை வெற்றி’ ஆகிய தலைப்புகளின் கீழ் நாட்டின் மிகச்சிறந்த மார்க்க அறிஞர்கள்  சிறப்புரையாற்ற உள்ளனர்.

சமூகத்தில் நல்லதொரு மறுமலர்ச்சியையும், சிந்தனைத் தெளிவையும், சிறந்ததொரு  மாற்றத்தையும் உருவாக்கும் நோக்கில், நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாகவே இம்மாநாடு புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் கலந்துகொள்வதற்கென தனித்தனியாகச் சிறந்த வசதிகளுடன் கூடிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

2 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜனாதிபதி அனுரவின் ஆட்சி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (21)...

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...