ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு 5 பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார் என்றும் குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளார் என்றும் இந்த விடயங்கள் அனைத்தும் தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் பல விடயங்கள் வெளிவருகின்ற நிலையில் ஒரு தரப்பினர் கலக்கமடைந்து கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

அதேவேளை எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதற்கு அடிபணியப் போவதில்லை என்றும் சட்டத்தின் பிரகாரமே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்   குறிப்பிட்டார்.

கடந்த 90 நாட்களில் சுரேஸ் சலே சகல மருத்துவ வசதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதேபோல் சகல சலுகைகளையும் அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன.
கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பயணத்தடை விதித்த பின்னரே, சுரேஸ் சலே எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் சித்திரவதைகுள்ளாவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

 

Popular

More like this
Related

QR குறியீடு மூலமான எரிபொருள் ஒதுக்கீட்டு முறை தொடரும்: கனிப்பொருள் கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை...

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...