அங்குருவாத்தொட்ட முதியோர் இல்லத் தீ விபத்து: பணிப்பாளர் கைது!

Date:

அங்குருவாத்தொட்ட, படாகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், அதன் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளின்படி, குறித்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 71 பேரில், 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...