மீகொடை தன்சல் விபத்து: சாரதிக்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Date:

மீகொடை பகுதியில் வெசாக் தன்சல் நிகழ்வில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கெப் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றிரவு மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது கெப் வாகனம் ஒன்று மோதி  விபத்தை ஏற்படுத்தியதில்   6 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் குழந்தை ஒன்றும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

இதனையடுத்து கெப் ரக வாகனத்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில் கொடகம சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த கெப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

GIT பரீட்சை தொடர்பான சந்தேகங்களுக்கு 1911 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்!

தரம் 12 மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை (2027...

ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதற்குத் தடை!

உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர், கொழும்பு கோட்டை ஜனாதிபதி...

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழை எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...