இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதமொன்றுக்கு ரூ.17,117 தேவைப்படுகிறது: புள்ளிவிபரத் திணைக்களம்.

Date:

இலங்கையில் நபரொருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 17,117 ரூபா தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்  வெளியிட்டுள்ள 2026 ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டு (Official Poverty Line) புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தரவுகளின்படி, மாதாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதிகூடிய செலவு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு நபரொருவருக்கு மாதமொன்றுக்கு 18,461 ரூபா தேவைப்படுகிறது.

அதேநேரம், இதற்கான ஆகக்குறைந்த செலவு மொனராகலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு நபரொருவருக்கு மாதமொன்றுக்கு 16,367 ரூபா தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு சாராத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்சச் செலவைக் குறிப்பதுடன், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இது மாதாந்தம் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்படி, இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடானது 2012/13 ஆம் ஆண்டுக்கான வீட்டு வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பின் (Household Income and Expenditure Survey) அடிப்படையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை (NCPI) பயன்படுத்தி, மாவட்ட ரீதியிலான விலை வேறுபாடுகளுக்கு ஏற்ப மாவட்ட உத்தியோகபூர்வ வறுமைக் கோடுகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...