அரகலய கைது வழக்கு: அடிப்படை உரிமைகளை மீறிய தேசபந்து தென்னகோன்!

Date:

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ (Aragalaya) போராட்டக் காலத்தின்போது, ​​சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான அப்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த நளின் பிரியந்த ஆகியோரே இந்த மீறலுக்குப் பொறுப்பானவர்கள் என்று நீதிமன்றம் கண்டறிந்தது.

போராட்டத்தின் போது தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அனுருத்த பண்டார  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...