சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின் மகளின் புனித நிக்காஹ் திருமணம், பூமியின் மிகவும் புனிதம் நிறைந்த இடமான மக்கா அல்-முகர்ரமாவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் (கஃபா) வளாகத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பங்கேற்புடன் ஒரு எளிய ஒன்றுகூடலாக நடைபெற்ற இந்நிகழ்வு, பெரும் பாக்கியமாகவும் இறையருள் நிறைந்ததாகவும் அமைந்தது.
இப்புனிதமான தருணத்தில், எல்லாம் வல்ல அல்லாஹ் புதுமணத் தம்பதிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான மற்றும் நேர்மையான வாழ்க்கையை வழங்கி அருள் புரிய வேண்டும்.
புதுமணத் தம்பதிகளுக்கு ‘நியூஸ்நவ்’ சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


