மனித உரிமைகள், சமய அடையாளம் மற்றும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பு: கலந்துரையாடல் நிகழ்வு! 

Date:

சமூக ஆய்வுகளுக்கான மையம் (Center for Social Studies – CSS) நடத்தும் “மனித உரிமைகள், சமய அடையாளம் மற்றும் கல்வி பெறுவதில் சம வாய்ப்பு” என்ற தலைப்பிலான முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை 7.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை காலி வீதி, தெஹிவளை CSS அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது சமய ஆடை அணிவது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2026 ஜூன் 26 அன்று வெளியிடப்பட்ட முக்கிய தீர்மான அறிக்கையை ஆராய்வதையே இந்த நிகழ்வு முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விவாதத்தில் துறை சார்ந்த சசட்டத்தரணிகளான மஹபூபா ரிஃபாய்தீன் (Mahabooba Rifaideen – LL.M., Attorney-at-Law), ருடேன் ஜாஹிர் (Rudane Zahir – Attorney-at-Law) கலந்து கொண்டு கருத்துரையாற்றவுள்ளனர்:

கல்வி உரிமை, மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த ஆரோக்கியமான விவாத நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை – பாலஸ்தீனம் இடையிலான நட்புறுதியை மேலும் வலுப்படுத்த இருநாடுகள் உறுதி!

இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும்...

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் செப்டம்பர் 24, 25 இல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம்...

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...