தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

Date:

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை இன்று (06) முதல் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இந்த விபத்துத் தடுப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களில் கணிசமான சதவீதமானோர் திடீர் விபத்துக்கள் காரணமாகவே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுதல், வீதி விபத்துக்கள், வேலைத் தளங்களில் ஏற்படும் விபத்துக்கள், நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்கள் மற்றும் வீடுகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆகியவை அவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

சுகாதாரச் சேவைக்கும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா, இன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த வாரத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள், ஆபத்தான இடங்களைக் கண்டறியும் நடவடிக்கைகள், பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைச் செயல்பாடுகள் மற்றும் விபத்துக்களைக் குறைப்பதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...

தொழுகைக்கு முன் வுளு செய்வதற்கு குறைந்தளவு தண்ணீர்: பிரிட்டன் அரசு அமைப்பின் வழிகாட்டுதலால் சர்ச்சை!

பிரிட்டனின் நீர் விநியோகத் துறை முறைப்படுத்தும் அரசு சார்பற்ற அமைப்பான Ofwat...