நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 29 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்களில் உள்ள அனைத்துக் கைதிகளும் கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொ*லப்பட்ட இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாகவும், ஏனைய காவலர்கள் சார்ஜன்ட் பதவிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
