யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறியமைக்காகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதோடு, அவரது பிணையாளர்களும் ஆஜராகியிருக்கவில்லை.
இதையடுத்தே, பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
