இலங்கையில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 7,000 பேர் மரணம்!

Date:

வளிமண்டலக் காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காற்றிலுள்ள பல்வேறு தீங்கிழைக்கும் நுண் துகள்களே இதற்குக் காரணம் என விசேட வைத்தி நிபுணர் சாந்தனி விதான சுட்டிக்காட்டியுள்ளார்.

காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் முதல் 8 மில்லியன் மக்கள் வரை உயிரிழப்பதுடன், இலங்கையிலும் இக்காரணத்தால் ஆண்டுக்கு 7,000 பேர் வரை அகால மரணமடைகின்றனர்.

விறகுகளை எரிப்பதன் மூலமும் பெருமளவிலான நச்சு வாயுக்கள் சுற்றாடலில் வெளிவிடப்பட்டு வளிமண்டலம் மாசடைவதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் (Health Promotion Bureau) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவர் சாந்தனி விதான இத்தகவல்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...

ஜனாதிபதி தலைமையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கலந்துரையாடல்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட...

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான பதிவு ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண...

மிச்சிகன் செனட் தேர்தல்: யூத பின்புலம் கொண்ட ஹேலி ஸ்டீவன்ஸை வீழ்த்தி அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற மாநில செனட் சபைக்கான (US Senate)...