கல்முனை..ஆடையின் பெயரில் ஒரு நிர்வாணம்..!: சமூக நல்லிணக்கம் மனிதநேயத்தை வலியுறுத்திய ஆக்கப்பூர்வமான கவிதை

Date:

கல்முனை ஆடை விவகாரம் சமூகத்தில் பலதரப்பட்ட விவாதங்களையும் கருத்து மோதல்களையும் தோற்றுவித்துள்ளது.

எந்தவொரு சமூகப் பிரச்சினையையும் வெறுப்பையோ பிரிவினையையோ வளர்க்காமல், புரிதலையும் சகிப்புத்தன்மையையும் நோக்கி நகர்த்துவதே ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு அழகாகும்.

தனிமனித உரிமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட ஆக்கப்பூர்வமான கவிதை இது.

எத்தனை முறை செத்தாலும்…
சிலருக்கு உயிரின் பெறுமதி தெரிவதில்லை…!

எத்தனை பேரைக் கொன்றாலும்…
அந்த ரத்த தாகம் தனிவதில்லை…!

தனக்கென்று வரும்போது…
தவறுகள் சுவைக்கிறது…!

இனவாதம் இனிக்கிறது…!
உரிமைப் போர் மறக்கிறது…!

மனசாட்சி…
மண்ணுக்குள் புதைந்துகொள்கிறது…!

###

உண்மை சொல்லவா…
உங்கள்
இலக்கு இன்னொன்று…!!

ஆடை அல்ல…
‘அவர்கள்’ தான் இலக்கு…!!

ஆடையை தடுத்தால்
அவர்களை தடுக்கலாம்..!

அதனை மறுத்தால்…
அவர்களை மறுக்கலாம்..!

இன்னொரு இனம்..
இணைவதை இல்லாமல் செய்யலாம்…!!

###

100 வீதம் இருக்கிறோம்..!
சுய ஆட்சி புரிகிறோம்..!

எழுதப்படாத விதிகளில் ஏதேதோ செய்கிறோம்…!

இவர்களுக்கு இடமளித்தால்…
இதுவெல்லாம் கெடும்…

சுதந்திரங்கள் தேய்ந்துபோகும்…
தொழில்வாய்ப்பு பாதியாகும்…!

சைவக் கோட்டையில்…
மாமிசம் மணக்கும்…

அக்காவின்…

21 வருட இடைவிடா இன்பத்தில்
Transfer குறுக்கிடும்…!

இணைந்து வாழும் இலங்கை என்ற…
பூகம்பம் நிகழ்ந்துவிடும்..!!

###

போலிகளே…!

முகமூடிக்குள் மூச்சுவிடும்…
இனவாதிகளே…

எல்லாம் ஒன்றென்று…
எதுவரை போவீர்கள்…?

பொட்டை
அழிப்பீர்களா…?

கைநூலை…
கழட்டி வைப்பீர்களா…?

காதுப்பூ.. மூக்குத்தி…
வீசிவிடச் சொல்வீர்களா..?

கறுப்பு – வெள்ளை தோல் நிறங்கள்…

Surgery செய்து…
மாறிவா வா என்பீர்களா…?

பொய்யிற்கு
விளக்கம்…!

பேயிற்கு
வரைபடம்…!!

இரு துண்டுப் புடவைக்கு…
இப்படி ஒரு பித்தலாட்டம்…!!

###

எந்தப் பாடசாலையில்
பர்தா போட பணித்தார்கள்…?

எந்தக் கல்லூரியில்…
பொட்டை அழி என்று போர்க்கொடி தூக்கினார்கள்…!?

எந்த நிறுவனத்தில்… நீ
சாரி அணிய சம்மதம் மறுத்தார்கள்..?!

அஷ்ரப் ஹொஸ்பிடல்…
அடித்து விரட்டியதா..?

மருதமுனை மருத்துவமனை…
மிரட்டி அனுப்பியதா..?

ஊனமுற்றவர்களே…!

உள்ளத்தில்
மிருகம் வளர்ப்பவர்களே…

எதற்கு எப்போதும் விஷம்…!!?

‘சண்முகா’வில்
சத்தி எடுப்பதும்…!

கல்முனையில்…
கழட்டச்சொல்வதும்…!!

அரசியல் சாசனத்தை…
அத்து மீறி நடப்பதும்..!!

என்று மறையும்…
இந்த மடத்தனம்…?

###

இப்படித்தான்
நீங்களென்றால்…!

இதுதான் உங்கள் நிறம் என்றால்…!!

சிங்களத் தனிச்சட்டம்…!
ஏன் எதிர்த்தீர்கள்…?

ஒரே நாடு ஒரே மொழி…
ஏன் மறுத்தீர்கள்…?

இத்தனை காலம் எதை நீங்கள்…
உரிமை என்று போராடிநீர்கள்…?

###

நீதி சாகும்போது…
இதயம் கொதிக்கிறது…!

மீண்டெழும் தேசத்தில்…!
மீண்டும் ஒரு
பிழை முளைக்கிறது..!!

இதயப் புற்றுநோய்க்கு
இடமாற்றம் தீர்வல்ல…!

வன்மத்தை கக்குவோர்க்கு…
வாய்ப்பளித்தல் சரியல்ல..!?

நீதி இதுவல்ல…!!!

அமைச்சர்களே…
ஆவண செய்யுங்கள்…!

எதிர்க்கட்சிகளே…
எழுந்துநின்று பேசுங்கள்…!

பாதிக்கப்பட்டவரை அல்ல…
பாதித்தவரை
மாற்றுங்கள்…!

இப்படி ஒரு தவறு…
இனியும் நடைபெறாமல்…

திருத்தி ஒரு தீர்ப்பை…
தீயால் எழுதுங்கள்…!!


19-08-2026

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

53 ஆவது வருடத்தை பூர்த்தி செய்யும் இஸ்லாமிய கலாபீடம் ஜாமியா நளீமியா!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக...

பலாந்தை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு செப்டம்பரில்

களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று  சிறப்புமிக்க பலாந்தை பிரதேச...