விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

Date:

தற்போது வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன,

“நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டிற்குள் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் நிலையை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.

மேலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கவும் நாங்கள் நம்புகிறோம். அதிலிருந்து, சுமார் 2 ஆண்டு காலத்திற்குள், நாட்டில் உள்ள 17 மில்லியன் மக்கள் அனைவரையும் பழைய அடையாள அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் முறைக்குக் கொண்டுவர நாங்கள் நம்புகிறோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் !

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில்...

“ஒற்றுமையும் சரியான சிந்தனையும் சமூக எழுச்சியின் அடித்தளம்”:ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவர் அஷ்ரப் ஜமால்தீன் உரை  

“நற்கருமங்களிலும் பொதுநலப் பணிகளிலும் பரஸ்பரம் ஒத்துழைத்து, விட்டுக்கொடுத்து, உற்சாகத்துடன் இணைந்து செயல்படும்...

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக...