42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழா: போருதோட்டையில் ஆரம்பம்

Date:

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவின் இணைந்த நிகழ்ச்சிகள் போருதோட்டையில் ஆரம்பமாகியுள்ளன.

பிரதி சபாநாயகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாம் பார்வையிடப்பட்டது.

அல்-பலாஹ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் போர்ட்(Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

42 வது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சமூக நலன்புரி நிகழ்ச்சித் தொடர் இன்று (22) நீர்கொழும்பு, போருதோட்டைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு ஆரம்பமானது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு, போருதோட்டை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள் உள்ளிட்ட அழைப்பாளர்களின் பங்களிப்புடன், அல்-பலாஹ் மகா வித்தியாலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான முகாமின் பணிகள் பார்வையிடப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

அவ்வேளையில், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, பேருவளையைச் சேர்ந்த தொழிலதிபர் அப்துல் லத்தீப் ஹாஜியார் அவர்களினால் அல்-பலாஹ் மகா வித்தியாலய மாணவச் செல்வங்களுக்காக நவீன ஸ்மார்ட் போர்ட் (Smart Board) இயந்திரம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்கள், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன அவர்கள், நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள், மௌலவிமார்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க...

வரலாற்றுச் சாதனை: சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் முதலிடம் பிடித்து நைஜீரிய பெண் மாபெரும் பெருமை!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது 'அப்துல் அஜீஸ் மன்னர்...

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகை சௌகார்...

சர்வதேச திருக்குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 3ஆவது இடம்: சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் வாழ்த்து!

சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள புனித ஹரம் ஷரீஃபில் நடைபெற்ற...