களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்று (03) முற்பகல் 11.30 மணிக்கு விடுக்கப்பட்ட ‘அம்பர்’ (Amber) நிறத்தைக் கொண்ட 02 ஆம் இலக்க எச்சரிக்கை அறிவித்தல், ஓகஸ்ட் 05 ஆம் திகதி முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, களனி கங்கைப் படுகையை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தற்போதைய நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு அத்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அப்பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகளில், குறிப்பாக உப வீதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடனும் அவதானமாகவும் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
